18 January 2011

பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!


அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...
முகம்:

பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்' செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முகஅழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்:

பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.

இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.

அழகுசாதனப் பொருட்கள்:

லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பற்கள்:

புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.

பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

கூந்தல்:

ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.

முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை:

உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்' செய்து அணிவது சிறந்தது.

இதுவும் அணிகலன்தான்:

கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.

2012ல் உலகம் அழிந்து விடுமா?: விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை



உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.

இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் திகியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.

சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.

திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.

இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.

இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.

விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.

இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.

சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் அவர்.

பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் விஞ்ஞானி அய்யம் பெருமாள்.

அழிந்துபோன 'மெமத்' இனம் மீண்டும் நான்கு வருடங்களில்: சாத்தியமா?



சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அழிந்த விலங்கினமான 'மெமத்' இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே இவ்வாறு ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளவராவார். இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாராய்ச்சிக்கு பொருத்தமான கருவினைத் தேடி சைபீரியாவிற்கு செல்லவுள்ளதாகவும் அகிரா தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சைபீரிய நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்துபோன மெமத்தின் உடல் தோல் மற்றும் தசை திசுக்களிலிருந்து கருவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியானது தோல்வியடைந்தது. கடும் குளிரினால் கருவானது சிதைவடைந்திருந்தமையே அதற்கான காரணமாகும்.

ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட 16 வருடங்களுக்கு முன் இறந்த எலியொன்றின் கலத்தின் மூலமாக குளோனிங் முறையிலான எலியின் உருவாக்கமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்பிக்கையின் பிரகாரமே சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன இனமொன்றினை மீண்டும் உருவாக்க முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவிற்கு முன் 10,000 ஆண்டளவில் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் வாள் நட்சத்திரம் ஒன்று பூமியில் மோதியால் ஏற்பட்ட தீயினால் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படுகின்றது.

விக்கிலீக்ஸின் தொழில்நுட்ப எதிரி சீனா : அசேஞ்ச்



விக்கிலீக்ஸ் இணையதளத்தின் தொழில்நுட்ப எதிரி சீனாதான், அமெரிக்கா அல்ல என அதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் ‌கூறியுள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தில் நிறுவனரான அசேஞ்ச் சுவீடனைச் சேர்ந்த இரு பெண்கள் கொடுத்த கற்பழிப்பு புகாரினால் சிக்கி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில் தி ஸ்டேஸ்மேன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விக்கலீக்ஸின் தொழில்நுட்ப ரகசியங்களை இடைமறித்து சீனா தெரிந்து கொண்டு அதன் தகவல்களை திருடு முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் சீன இணையதள வாசகர்களிடம் வெளியிடுகிறது. எ‌னவே விக்கிலீக்ஸின் தொழில்நுட்ப எதிரி சீனா தான். அமெரிக்க அல்ல. மேலும் இது குறித்து சீனா மீது உரிய முறையில் வழக்கு தொடரப்படும் என அசேஞ்ச் மேலும் தெரிவித்தார்.

ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டங்களை பார்வையிடும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்



ஈரான் தமது அணுநிகழ்ச்சித் திட்டத்திற்கான ஆதரவினைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவதற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் சமிக்ஞையாகவே தாம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

ஆனால், தற்பொழுது ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரிகள் குழுவில் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் அழைப்பை நிராகரித்திருந்தன.

தமது யுரேனியம் செறிவூட்டல் திட்டமானது திறம்பட நடைபெறுவதாக ஈரான் கூறியுள்ளது.ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் சர்வதேச தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா கூறியதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஈரான் இவ்வாறு கூறியுள்ளது.

இந்நிலையில், அல்ஜீரியா, கியூபா, எகிப்து, ஓமான், சிரியா, வெனிசூலா, அரபு லீக் தூதுவர்கள் ஈரானின் சில அணுவுலைகளை பார்வையிட்டுள்ளனர்.

எந்தவொருநாடும் தமது அணுவுலைகளை மற்றயவர்களுக்கு காண்பிப்பதில்லை. அத்துடன்,ஈரானின் அணுவுலைகள் அமைதிக் தேவைக்கானவை என்பதை நிரூபிக்கும் சமிக்ஞையாக இது உள்ளதென ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேசத்தின் தடைகள் ஒருபோதும் எமது அணுத்திட்டத்தினைப் பாதிக்கப்போவதில்லை எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி தெரிவித்துள்ளார்.

எமது செயற்பாடுகள் குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் மிகவும் வலுவாக நடைபெறுகின்றது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்திஅதிகரித்து வருகிறது எனவும் சலேஹி தெரிவித்தார்.

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுநிகழ்ச்சித் திட்டம் குறித்த ஐ.நா. பேச்சுக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஈரான் இராஜதந்திரிகள் குழுவைத் தமது அணுத்திட்டங்களைப் பார்வையிட அனுமதித்துள்ளது.

நெல்சன் மண்டேலா மரணமடைந்ததாக செய்தி பரப்பிய இணையத்தளம்



தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (92). இவர் இனவெறிக்கு எதிராக போராடிய அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்து விட்டதாக ஒரு இணைய தளத்தில் செய்தி வெளியானதாக தெரிகிறது.
இதனால் தென்ஆப்பிரிக்காவில் வதந்தி பரவியதை தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் குறிப்பிடுகையில் இது ஒரு வதந்தி எனவும் அமையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதோடு குறித்த இணைதளம் தான் தவறான செய்தியை பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த இணையதளம் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக ஜோக்குகளை வெளியிட்டுள்ளது. பாடகர் சுரேதா பிராங்க்களின், நடிகர்கள் சார்லி ஷீன், ஜானிதிப், மெஹாகன் பிரீமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பின்னர் அது ஜோக் என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12 January 2011

கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு



கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மொபைல் போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:

மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.

இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகா கூறினார்.

ஸ்கைப்பில் எழுந்த திடீர் பிரச்சினை



பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!

இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது

4600 பில்லியன் வருடங்களுக்கு முன் புவியின் அமைப்பு



இன்றைக்கு 4600 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் அதாவது புவி தற்போதைய நிலையைவிட மிக வேறுபட்டே காணப்பட்டது. புவியைச்சுற்றி வாயுக்களால் ஆன முகில்களால் சூழப்பட்டே காணப்பட்டது.
அன்று அதன் வெப்பநிலை 4000 பாகை செல்லியஸ் தொடக்கம் 8000 பாகை செல்லியஸ் வரை காணப்பட்டது. பின் அண்டவெளியில் (விண்வெளியில்) ஏற்ப்பட்ட சில தாக்கங்களால் புவியை சுற்றியுள்ள முகில்கள் குளிர்வடைந்தது. புவியின் மத்தியில் செஞ்சூடான திரவ குழம்பு நிலை காணப்பட்ட போதிலும் அதன் மேற்பரப்பு குளிர்ச்சியுற்று திண்மமாகி பொருக்கு பாறைகளால் ஆன புவி உருவானது.

இப்புவி படிப்படியாக சிதைவடைந்து மண் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் 'சிப்' கண்டுபிடிப்பு



நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்” பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.

இப்போது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆசியாவில் முதன்முறையாக 4ஜி வலையமைப்பு: பரீட்சிக்கும் சீனா



4ஜி (4G) எனப்படும் நான்காம் தலைமுறை (fourth-generation) மொபைல் வலையமைப்பு தொழிநுட்பத்தினை சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமான சீனா மொபைல் நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.
இதற்கான அனுமதியை சீன அரசு வழங்கியுள்ளது.

மேற்படி பரீட்சாத்த நடவடிக்கையானது சீனாவின் சங்ஹாய், ஹங்ஷவு, நாஞ்ஜிங், குவங்சோவு, சென்சென், மற்றும் சியாமென் ஆகிய 6 நகரங்களில் இடம்பெறவுள்ளது.

'சீனா மொபைல்' நிறுவனமானது சீனாவின் மிகப்பெரிய தொடலைத்தொடபு நிறுவனம் என்பதுடன் சுமார் 579 மில்லியன் பாவனையாளர்களையும் கொண்டது.

அதிவேக 4ஜி தொழிநுட்பமானது சீனாவின் உள்ளூர் டிடி-எல்.டி.யி தொழிநுட்பத்துடன் இணைந்து பாவனையாளர்கள் தங்களது தரவுகளை வேகமாக பரிமாற்ற உதவும் என அந் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3 ஆம் தலைமுறைத் தொழிநுட்பமான 3ஜி சேவைகள் சீனாவில் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்



இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்



ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.

இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.

இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :

ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.

ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:

ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.

காருக்கான பிளாக் பாக்ஸ்:

தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ஜிபிஎஸ் ஜாம்மர்:

உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.

மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:

வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.

ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை

கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார்.

தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்று வரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார்.

இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெடித்துச்சிதறும் நட்சத்திரம் (Super Nova ) எனப்படுவது பிரமாண்டமான நட்சத்திரங்கள் தமது எரிபொருட்கள் நிறைவடைந்ததன் பின்னர் மாபெரும் ஒளியாற்றலை வீசிக்கொண்டும் பாரிய சத்தத்துடனும் வெடித்துச்சிதறுதலாகும்.

இதன்போது வெளியிடப்படும் ஓளிர்வானது, சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றலை விட அதிகமானதாகும்.

காதலை எப்படி சொல்வது?



மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது' என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள்.
இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...

* காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

* அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.

* காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.

* `நான் உங்களை காதலிக்கிறேன்' என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லலாம்.

* கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி' என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.

* வார்த்தைகளை `வளவள'வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.

* எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்' என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

* பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விïவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

* புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்.

நோக்கியா E5



நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது.
உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது.

மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள்

▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery

கடலில் இருந்து மின்சாரம்!



உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.
சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது.

எனவே செலவு குறைவாக உள்ளதும், தொடர்ந்து மின்சக்தியைத் தருவதுமான புதிய ஆற்றல் மூலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

அவ்வாறு அமைந்த புதிய வழிமுறைதான் கடலில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும். அலை வீச்சு, கடலில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள், ஆறுகள் கடலில் பாய்ந்து கலப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆற்றலை நாம் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடல் அலைகளில் இயங்கு ஆற்றலும், நிலை ஆற்றலும் அடங்கியிருக்கின்றன. அலை உயரும்போது நிலை ஆற்றலையும், விழுந்து பாயும்போது இயங்கு ஆற்றலையும் கொண்டிருக்கிறது.

அலைகள் எழும்பித் தாழ்ந்து பாயும் பாய்ச்சலைப் பயன் படுத்தி, 'டர்பைன்களை’ சுழலச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ட்பத்தை மின்சாரப் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடல் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாடு முன்னணியில் திகழ்கிறது. நம் நாட்டிலும் கட்ச், காம்பே போன்ற கடல் பகுதிகளில் இம்முறையைப் பின்பற்றி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள கடல் மின்சார உற்பத்திச் சாதனங்களை விட செலவு குறைவான, செயலாற்றல் அதிகமுள்ள சாதனங்களை உருவாக்கும் தொழில்ட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு; நாசா விஞ்ஞானிகள் தகவல்



விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர்.அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது.

இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ முடியாது. எனவே தான் இது உயிரினங்கள் வாழ தகுதியற்றது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானிகள் நாசா விண்வெளி நிறுவனத்தின் கெப்லர் திட்ட விஞ்ஞானி டக்ளஸ் ஹட் ஜின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கிரகத்தில் கார்பன் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இல்லை.

எனவே, இங்கு ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ. மூலக்கூறுகள் தோன்ற வாய்ப்பு இல்லை. ஆகவே பூமியை போன்று இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. என்று நாசா வின் மற்றொரு விஞ்ஞானி நடாலி படால்கா தெரிவித் துள்ளார்.

11 January 2011

4000 வருடங்கள் வாழும் தாவரம்


படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.
இதன் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது.

கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் எடை சராசரியாக 2000 தொன் என கணிக்கப்பட்டுள்ளது.

பகல் கனவு காணும் குழந்தைகள்!



வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைகளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் ஹஎம்.ஆர்.சி. கிளினிக்கல் சயன்சஸ் சென்டர்' ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போதுஇ நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழிப்பு உணர்வுக்கான மூளைப் பகுதிகள்இ பிறந்த குழந்தைக்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் செயல்பாடுஇ வளர்ச்சி குறித்த தற்போதைய கருத்துகளுக்குச் சவாலாகத் திகழ்கிறது புதிய கண்டுபிடிப்பு.

இம்பீரியல் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஇ 29 வாரங்கள் முதல் 43 வாரங்கள் வரையிலான 70 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களின் ஹமூளை ஓய்வுநிலை வலைப் பின்னல் அமைப்பு' எவ்வாறு இருக்கிறது என்று ஹஎம்.ஆர்.ஐ. ஸ்கேன்' எடுத்துப் பார்க்கப்பட்டது. இந்த ஓய்வுநிலை வலைப்பின்னல் அமைப்பானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தாத போதும் அல்லது தூக்கத்தின் போதும் செயல்பாட்டு நிலையில் உள்ள நிரான்களின் இணைப்பாகும். கருவில் உள்ள சிசுவானது பிறக்கும் நிலையை எட்டும் போதுஇ இந்த வலைப்பின்னல் அமைப்பு பெரியவர்களுக்கு உள்ளதைப் போல முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறது.

இந்த வலைப்பின்னல் அமைப்புகளில் ஒன்றான ஹடீபால்ட் மோட் நெட்வொர்க்'இ நடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பதுஇ பகல் கனவு காண்பது ஆகியவற்றில் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யாதபோது மேற்கண்ட நெட்வொர்க்கானது ஹஆக்டிவ்' ஆகவும்இ ஒரு பணியில் கவனமாக ஈடுபடும்போது குறைவான ஹஆக்டிவ்' உடனும் இருப்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குழந்தைகள் தூங்கும்போது இந்த ஹநெட்வொர்க்'இ செயல்பாட்டில் இருக்கிறது.

ஆய்வுக் குழுவின் முக்கிய உறுப்பினரான பேராசிரியர் டேவிட் எட்வர்ட்ஸ்இ குழந்தைகளின் மூளைச் செயல்பாடு குறித்த முந்தைய கருத்துகளை எங்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன என்கிறார்.

நடிகை ரஞ்சிதாவை துரத்தும் பக்கத்து வீட்டுக்காரர்!



நித்யானந்தா சாமியாருடன் ரஞ்சிதா இருந்த வீடியோக் காட்சியினால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியான நாள் முதல் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்த நடிகை ரஞ்சிதாஇ தற்போது சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு பிடித்து வசித்து வருகிறார்.

பெரும்பாலும்இ பகல் நேரத்தில் வெளியே தலை காட்டுவதே இல்லையாம் இவர். இருப்பினும் ரஞ்சிதா வாடகை வீட்டில் வசித்து வருவதை சிலர் கண்டுபிடித்து விட்டனர்.

ரஞ்சிதா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன்இ அவர் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவதுஇ இது குடும்ப பெண்கள் வசிக்கின்ற இடம். எனவேஇ நீங்கள் உடனடியாக வீட்டை காலி செய்து விடுங்கள் என்று அனுதினமும் வற்புறுத்தி வருகிறார்களாம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களின் துரத்தலால் என்ன செய்வதென்றே தெரியாமால்இ ரஞ்சிதா பெரும் குழப்பத்தில் உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

tench உறுப்பினர்கள் பாலத்தடியில்


tench உறுப்பினர்கள் பாலத்தடியில்

10 January 2011

NASA- National Aeronautics and Space Administration (நாசா)

அமைவிடம்: ஐக்கிய அமெரிக்கா
அமைக்கப்பட்டது: ஜூலை 29, 1958
தலைமையகம்: வாஷிங்டன் டிசி
குறிக்கோள்: Ad astra per aspera (இலத்தீன்)
"To the stars through difficulties"
தலைவர்: மைக்கல் கிறிஃபின்
வரவு-செலவு: $16.8 பில்லியன்[1]
இணையதளம்: www.nasa.gov

நாசா (National Aeronautics and Space Administration - NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது 1958 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் ஆண்டு வரவு செலவு நடப்பு ஆண்டு 2007 இல் $16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[1]

விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.

நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Molecular gears from a NASA computer simulation.நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10-9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர் [1]


நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications." நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப் புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.